Home
Mobile

சாம்சங் அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனை உலக சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ08 அம்சங்கள் (Samsung Galaxy A08 Specifications): 6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1600 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate),16 மில்லியன் கலர்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. எந்த மாடல்?

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

குறிப்பாக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் ஆகும். குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

டார்க் ப்ளூ, சில்வர், கிரீன் ஆகிய கலர்கள் இந்த புதிய கேலக்ஸி ஏ08 போன் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாம்சங் போனின் ஆரம்ப விலை UAH 10,699 (இந்திய மதிப்பில் ரூ.23,000)-ஆக உள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A08 Officially Launched: 6,000mAh Battery, 50MP Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X