Home
Mobile

அடுத்த சாம்சங் போன் ரெடி.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 6 ஓஎஸ் அப்டேட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ08 (Samsung Galaxy A08) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் முதலில் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ08 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ08 அம்சங்கள் (Samsung Galaxy A08 Specifications): 6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

அடுத்த சாம்சங் போன் ரெடி.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 17 (Android 17) இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளிவரும் ஆனாலும் இந்த போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

டார்க் ப்ளூ, சில்வர், கிரீன் ஆகிய கலர்கள் இந்த புதிய கேலக்ஸி ஏ08 போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ08 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A08 full specifications revealed: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X