Home
Mobile

ரூ.10000 பட்ஜெட்டில் Samsung-ன் புது சிங்கக்குட்டி.. இதோட Redmi, POCO, Motorola கதை முடிஞ்சது.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எம்47 5ஜி (Galaxy M47 5G) ஸ்மார்ட்போனை ரூ.22,999 க்கு அறிமுகம் செய்து, அதன் விற்பனையை கூட இன்னும் தொடங்வில்லை. அதற்குள் கேலக்ஸி எம்47 5ஜி மாடலை விட இன்னும் மலிவான, புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி விட்டது

என்ன மாடல்? சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மலிவு விலை கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு ஒரு படி நெருக்கமாக வந்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ08 4ஜி (Samsung Galaxy A08 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இது SM-A085F/DS என்ற மாடல் நம்பருடன் வைஃபை அலையன்ஸ் (Wi-Fi Alliance) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது - இந்த ஸ்மார்ட்போன் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை நெருங்கி கொண்டிருப்பதை குறிக்கிறது.

ரூ.10000 பட்ஜெட்டில் Samsung-ன் புது சிங்கக்குட்டி.. எந்த மாடல்?

எப்போது அறிமுகம்? மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே - சாம்சங்கின் என்ட்ரி லெவல் சீரீஸ் ஆன கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் - கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஏ07 4ஜி (Galaxy A07 4G) மாடலுக்கு அடுத்ததாக கேலக்ஸி ஏ08 4ஜி வரவுள்ளது. கேலக்ஸி ஏ07 மாடலானது ஆகஸ்ட் 2025 இல் அறிமுகமானதை கருத்தில் கொண்டால், சாம்சங் தனது வருடாந்திர வெளியீட்டு சுழற்சியை பின்பற்றும் பட்சத்தில், கேலக்ஸி ஏ08 4ஜி ஆனது ஆகஸ்ட் 2026 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

என்ன விலைக்கு வரும்? இப்போதைக்கு கேலக்ஸி ஏ08 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து சாம்சங் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனாலும் முந்தைய மாடல், வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு நல்ல குறிப்பை வழங்குகிறது. கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB ஆப்ஷன் இந்தியாவில் ரூ.8,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது 6.74-இன்ச் HD+ 90Hz டிஸ்பிளே, MediaTek Helio G99 சிப்செட், 50MP டூயல் ரியர் கேமராக்கள், 8MP செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி, IP54 தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பு வசதி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது

என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் கூட கேலக்ஸி ஏ07 4ஜி ஆனது ஆறு முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் சாம்சங் உறுதியளிக்கிறது. இது ரூ.10000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவில் மிக சிறந்த சாஃப்ட்வேர் சப்போர்ட் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

ஆக கேலக்ஸி ஏ08 5ஜி ஸ்மார்ட்போனிலும் நாம் சாம்சங்கின் நீண்டகால சாஃப்ட்வேர் ஆதரவை எதிர்பார்க்கலாம். அதே வேளையில், புதிய ப்ராசஸர் (processor), மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் அல்லது இன்னும் பெரிய பேட்டரி போன்ற மேம்பாடுகளையும் நாம் எதிர்பார்க்கலாம். அனால் நிச்சயமாக விலை ரூ.10,000 க்குள் இருக்காது. மாறாக ரூ.10,000 க்கு மேல் தான் இருக்கும்

ஒருவேளை சாம்சங் நிறுவனத்தால் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் அறிமுக விலைக்கு அருகிலேயே கேலக்ஸி ஏ08 4ஜி மாடலின் விலையையும் தக்கவைக்க முடிந்தால், நம்பகமான பட்ஜெட் ஸ்மார்ட்போனை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையக்கூடும்.

சமீபத்திய விலை உயர்வுகளை கருத்தில் கொண்டு பார்க்கையில், கேலக்ஸி ஏ08 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்கும் குறைவான விலைப்பிரிவை இலக்காக கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இப்பிரிவில் இது ரெட்மி (Redmi), போக்கோ (POCO), லாவா (Lava) மற்றும் மோட்டோரோலா (Motorola) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டியிடும்!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A08 4G Tipped to Launch Soon what to expect Price Range Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X