Samsung ஒரே போடு.. ரூ.16,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 90Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ07எஸ் (Samsung Galaxy A07s) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், குறிப்பிட்ட சில மார்கெட்களில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. இருப்பினும், பட்ஜெட்டில் கிடைக்கும் பீச்சர்கள் மற்ற மார்கெட்டில் இருக்கும் கஸ்டமர்களையும் தட்டி தூக்கி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ07எஸ் அம்சங்கள் அம்சங்கள் (Samsung Galaxy A07s Specifications): 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99பிளஸ் (Octa Core MediaTek Helio G99+) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera) கொடுக்கப்பட்டு உள்ளது. 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது.
1080p ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7.6 எம்எம் தடிமன் உள்ளது.
188 கிராம் எடை கொடுத்துள்ளது. 4ஜி எல்டிஇ (4G LTE), டூயல்-பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் கிடைக்கிறது. பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் லைட் வயலெட் (Light Violet) கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,000 பட்ஜெட்டிலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இதே விலையில் மற்ற மார்கெட்களில் கிடைக்க இருக்கிறது. இந்தியாவிலும் வெளியாகுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இதே டிசைன் மற்றும் பீச்சர்களில் பல்வேறு மாடல்கள் இருக்கின்றன.
முன்னதாக இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ரூ.18,000 பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களை கொடுத்தது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்தது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது.
8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
