Home
Mobile

வீட்டுக்கு 2 ஆர்டர்! இலவச 25W சார்ஜர் உடன் ரூ.7000 பட்ஜெட்டில் புது Samsung போன்.. 5000mAh பேட்டரி, 50MP கேம்!

சாம்சங் நிறுவனம் "சைலன்ட் ஆக" ரூ.8000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சங்கின் என்டரி-லெவல் ஏ-சீரீஸின் கடைசியாக அறிமுகமான கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வந்துள்ள இந்த மாடலின் விலை என்ன? அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்

பட்ஜெட் விலை மாடல் ஆக இருந்தாலும் கூட ஹை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே, நீண்ட கால சாஃப்ட்வேர் ஆதரவு மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்பு போன்ற அம்சங்களுடன், சாம்சங் நிறுவனமானது அதன் வழக்கமான "சமநிலைப்படுத்தும்" பாணியை இந்த ஸ்மார்ட்போனிலும் செய்துள்ளது.

இலவச 25W சார்ஜர் உடன் ரூ.7000 பட்ஜெட்டில் புது Samsung போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது, இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்காக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப் கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே 2டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய உதவும் மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இது சாம்சங் நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) உடன் வருகிறது. இது தீங்கிழைக்கும் ஆப்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு ஆட்டோ பிளாக்கர் ஆகும். கூடவே இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி சிஸ்டம் - கேலக்ஸி போன்களில் மிகவும் பொதுவானது என்றாலும், சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு டீலை அறிமுகப்படுத்துகிறது. அது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனுடன் இலவசமாக 25W டிராவல் அடாப்டர் அனுப்பிவைக்கப்படும்

மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் 36ஜிபி எக்ஸ்எல் டேட்டா பேக்கேஜ் (36GB XL data package) மற்றும் 1 அல்லது 2 ஆண்டுகளுக்கான டோட்டல் ப்ரொடெக்ஷனை வழங்கும் சாம்சங் கேர் பிளஸ் (Samsung Care Plus) சேவையில் 30% தள்ளுபடியும் பெறுவார்கள்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும், கூடுதல் நீடித்துழைப்பிற்காக கிளாஸ் பைபர் ரெயின்போர்ஸ்டு பாலிமர்-ஐயும் (Glass Fiber Reinforced Polymer) கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது நீண்ட கால ஓஎஸ் ஆதரவுடன் வருகிறது

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான சாம்சங்கின் சொந்த ஒன்யுஐ 7 (One UI 7) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் றுதியளித்துள்ளது, அதாவது இது 2031 ஆம் ஆண்டு வரை அப்டேட்களை பெறு வேண்டும்.

ஆனால் இங்கே நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது: இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மீடியாடெக் ஹீலிய ஜி99 சிப்செட் ஆனது 5ஜி-ஐ ஆதரிக்கவில்லை. அதாவது இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போனாகும்; 5ஜி ஸ்மார்ட்போன் அல்ல. ஆக 2031 ஆம் ஆண்டு வரை நீங்கள் 4ஜி சேவையைத்தான் பயன்படுத்த முடியும். இது சில பயனர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் விலை: இப்போதைக்கு இது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்தோனேஷியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.7,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதே ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.12,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது லைட் க்ரீன், லைட் வயலட் மற்றும் பிளாக் என்கிற 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A07 with free 25W Charger Launched Check Out Price Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X