செம்ம டிமாண்ட்.. மட்ட ரேட் ரூ.10,229 க்கு Samsung ஸ்மார்ட்போன்.. 6 OS அப்டேட்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்டில் கிடைத்தால், விற்பனையில் டிமாண்ட் ஏற்படுவதில் ஆச்சரியம் இருக்காது. தள்ளுபடி விலையில் இன்பினிட்டி-யு எல்சிடி, 50 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 6 ஓஎஸ் அப்டேட்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ (Samsung Galaxy A07 LTE) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ ஸ்மார்ட்போன் ரூ.10,299 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ அம்சங்கள் (Samsung Galaxy A07 LTE Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேக் செய்துள்ளது.
ஆனால், 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஜெனரேஷன் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் இன்பினிட்டி-யு எல்சிடி (Infinity-U LCD) பேனலை கொடுத்து இருக்கிறது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த டிஸ்பிளே கொடுத்து உள்ளது. மீடியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து இருக்கிறது. 4 ஜிபி கேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 2 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கான சிலாட் கிடைக்கிறது. கூடவே, நானோ + நானோ சிம் சிலாட்கள் கிடைக்கின்றன. எப்/1.8 அபெர்சர் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் எப்/2.4 அபெர்சர் கொண்ட 2 எம்பி டெப்த் கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாததாக உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் எப்/2.0 அபெர்சர் கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைப்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டில் கேமராவுக்கு அடுத்து மற்றொரு ஹைலைட் பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 7.6 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது. மேலும், 184 கிராம் எடை கொடுத்து இருக்கிறது. 4ஜி மாடலுக்கு ஏற்ப கனெக்டிவிட்டிகள் உள்ளன.
ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொடுத்து உள்ளது. கிரீன் (Green), லைட் வயலெட் (Light Violet) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 எல்டிஇ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications