Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது Samsung போன்.. 6 OS அப்டேட்.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் பெரிய டிஸ்பிளே, 6 ஓஎஸ் அப்டேட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 அம்சங்கள் (Samsung Galaxy A07 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சத்தமின்றி அறிமுகமானது புது Samsung போன்.. 6 OS அப்டேட்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Helio G99 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ்கார்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்கள் கூட இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புது Samsung போன்.. 6 OS அப்டேட்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ்இ யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 184 கிராம் ஆகும்.

ஆனால் சாம்சங் கேலக்ஸி ஏ07 போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய சாம்சங் போனின் ஆரம்ப விலை Rp. 1,399,000 (இந்திய மதிப்பில் ரூ.7,300) ஆகும். க்ரீன், பிளாக், லைட் வயலட் நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ07 போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A07 launched with MediaTek Helio G99 processor: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X