அடுத்த சாம்சங் போன் ரெடி.. மலிவு விலை.. 50எம்பி கேமரா.. IP54 ரேட்டிங்.. 6 OS அப்டேட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அவ்வப்போது கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங்.
அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் முதலில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும். இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் நிறங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 அம்சங்கள் (Samsung Galaxy A07 Specifications): 6.7-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஒசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆறு ஓஎஸ் அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த சாம்சங் போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவுடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant)ஆதரவும் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது.
5000mAh பேட்டரி உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. மேலும் 4ஜி, புளூடூத் 5.3, வைஃபை 5, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
லைட் ப்ளூ (Light Blue), கிரீன் (green), டார்க் ப்ளூ (Dark Blue) நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த புதிய சாம்சங் போன் ரூ.7000 அல்லது ரூ.8000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
Photo Credit: X/@Sudhanshu1414


Click it and Unblock the Notifications








