Home
Mobile

மீண்டும்.. மீண்டுமா.. பட்ஜெட்ல புது Samsung 5ஜி போன்.. டைமன்சிட்டி 300 சிப்செட்.. 4 ஜிபி ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. ஏற்கனவே, ப்ளூடூத் எஸ்ஐஜி (Bluetooth SIG) சர்டிபிகேஷனுக்கு வந்தது. ஆனால், பீச்சர்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இப்போது, சிப்செட், ரேம் மற்றும் ஓஎஸ் விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி (Samsung Galaxy A07 4G) ஆகிய மாடல்கள் ஏற்கனவே இந்திய மார்கெட்டில் கிடைக்கின்றன. ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது, அதே பட்ஜெட் செக்மெண்ட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி போன் களமிறங்க இருக்கிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி சர்டிபிகேஷனுக்கு வந்தது.

மீண்டும்.. மீண்டுமா.. பட்ஜெட்ல புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆகவே, ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கிளாக் ஸ்பீடு உள்ளிட்ட விவரங்களை வைத்து பார்க்கும்போது, கேலக்ஸி ஏ06 5ஜி போனில் கிடைத்த சிப்செட் வரலாம்.

அந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைத்து இருந்தது. இந்த சிப்செட் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனில் வர வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவானது எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.

மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

பிளாக், கிரே மற்றும் லைட் கிரீன் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,499 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். பட்ஜெட் மாடலாக இருப்பதால், இந்தியாவில் வரவேற்பு பெற அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A07 5G With Android 16 OS 4GB RAM Key Specifications Tipped Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X