மொத்த இந்தியாவும் இந்த 5G போனை வாங்க போகுது.. ரூ.9000 பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி உடன் புது Samsung போன்!
பட்ஜெட் விலையில்.. 5ஜி ஆதரவு + பிக் பேட்டரி என்கிற காம்பினேஷனில் ஒரு தரமான ஸ்மார்ட்போனை வாங்க தயாராக இருக்கவும். ஏனென்றால் சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆன.. சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸில் ஒரு தரமான அப்கிரேட்-ஐ செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
ஒரு சமீபத்திய லீக் ஆனது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 5,000mAh பேட்டரி உடன் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி (Samsung Galaxy A07 4G) மாடலுடன் ஒப்பிடும் போது ஒருவொரு பெரிய அப்கிரேட் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி மாடல் ஆனது 2025 ஆம் ஆண்டில் சாம்சங்கின் அதிக விற்பனையான போன்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாம்சங் நிறுவனமானது "மதிப்பு" மற்றும் "குறைந்த விலை" என்கிற காம்பினேஷனில் இதை அறிமுக செய்தது தான்.
தற்போது உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி மாடல் ஆனது ஏற்கனவே 1 நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. இதற்கிடையில் மேலும் 1000mAh பேட்டரி அதிகரிப்பானது புதிய 5ஜி மாடலை விற்பனை செய்வதை இன்னும் எளிதாக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி மாடலில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த போன் மீடியா டெக்கின் டைமன்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது, இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். இதுசாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மாடலில் வழங்குவதை போலவே உள்ளது.
இருப்பினும், 5ஜி ஆதரவை சேர்ப்பது சமன்பாட்டை சிறிது மாற்றுகிறது. ஒரு பெரிய பேட்டரியுடன் இணைந்து, வேகமான இணைப்பை விரும்பும் வாங்குபவர்களுக்கு, மேலும் தேவையில்லாத பிரீமியம் வன்பொருளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு - கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை ஒரு நடைமுறை விருப்பமாக நிலைநிறுத்துகிறது. விலை ரூ.10,000 க்குள் (ரூ.9,499) இருக்கலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க வழக்கம் போல் சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இன்னமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. விலை நிர்ணயம், வெளியீட்டு நேரம் மற்றும் எந்தெந்த பிராந்தியங்களில் அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்களை இப்போதைக்கு தெரியவில்லை. வரும் வாரங்களில் சாத்தியமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் மேலும் 2 புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாக உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) மாடல்கள் ஆகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே குறிப்பிடத்தக்க கேமரா ஹராட்வர் மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட்பிரிக்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய இரண்டுமே வெளியாகும் பிராந்தியத்தை பொறுத்து சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் அல்லது சாம்சங்கின் இன்டர்னல் ஐசோசெல் எஸ்5கேஜிஎன்ஜே சென்சாரை உள்ளடக்கிய புதிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம்.
எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? முந்தைய அறிக்கைகள் துல்லியமாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஆகிய 2 மாடல்களுமே பிப்ரவரி 2026 இல் அறிமுகப்படுத்தலாம், அதாவது அதன் வழக்கமான 2026 மார்ச் அட்டவணையை விட சற்று முன்னதாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் (ரூ.34,990) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள சம்சந்த் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் (ரூ.45,990) அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








