போட்டான் பாரு.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 6 OS அப்டேட்.. புது Samsung போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 120 Hz டிஸ்பிளே மட்டுமல்லாமல், 6 ஓஎஸ் அப்டேட்களை கொடுக்க உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியாவில் வெளியாக இருப்பதை சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் மார்கெட்டில ஏற்கனவே வெளியாகிவிட்டது.

ஆகவே, கேமரா, சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே மட்டுமல்லாமல் பட்ஜெட்டையும் தெரிந்து கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் ரூ.12,873 பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. ஆகவே, இந்தியாவில் மலிவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் மட்டுமே பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் கிடைக்கின்றன. இந்தியாவிலும் இதே ரேம் மற்றும் மெமரி எதிர்பார்க்கலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இது 5ஜி மாடலாக இருக்கிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A07 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் உள்ளது.
ஒன் யுஐ 8.0 (One UI 8.0) கொடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனிலும் இதே ஆண்ட்ராய்டு அப்டேட் பாலிசி கொடுக்கப்பட்டது. 6.7 இன்ச் (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனை கொடுத்துள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.2 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொண்டிருக்கிறது.
IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் டைப்-சி போர்ட் (Type - C Port) கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. பிளாக் (Black) மற்றும் லைட் வயலெட் (Light Violet) கலர்களில் வருகிறது.
பிலிப்பைன்ஸ் மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,875ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,634ஆகவும் இருக்கிறது. இந்த விலையிலேயே இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கும்.


Click it and Unblock the Notifications








