Home
Mobile

தட்டி தூக்குறாங்க.. சர்ர்னு விலை குறைந்து ரூ.7900 க்கு விற்கப்படும் லேட்டஸ்ட் Samsung போன்.. IP54, 5000mAh!

சாம்சங் (Samsung) நிறுவனமானது கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுக செய்திருந்தது: கேலக்ஸி ஏ07 4ஜி (Galaxy A07 4G), கேலக்ஸி எப்07 4ஜி (Galaxy F07 4G) மற்றும் கேலக்ஸி எம்07 4ஜி (Galaxy M07 4G).

இந்த 3 மாடல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி மாடல் ஆனது 5ஜி வேரியண்ட்டை பெறவுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்ர்னு விலை குறைந்து ரூ.7900 க்கு விற்கப்படும் லேட்டஸ்ட் Samsung போன்

புதிய 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல்கள் (டிசைன், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்) லீக் ஆன வேகத்தில் கேலக்ஸி ஏ07 4ஜி மாடலின் விலை குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன் (4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்) ஆனது ரூ.8999 க்கு அறிமுகமானது.

ஆனால் தற்போது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் நேரடியாக (அதாவது எந்த பேங்க் டிஸ்கவுண்ட்டும் இல்லாமல் நேரடியாக) ரூ.1099 விலை குறைக்கப்பட்டு ரூ.7,900 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போனின் பிளாக் கலர் ஆப்ஷன் மீது கிடைக்கிறது.

க்ரீன் கலர் ஆப்ஷனில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.8000 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.999 விலை குறைப்பை பெற்றுள்ளது. கடைசியாக உள்ள லைட் வயலெட் கலர் ஆப்ஷன் ரூ.7,989 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது, இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்காக 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப் கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே 2டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய உதவும் மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா உள்ளது மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இது சாம்சங் நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) உடன் வருகிறது. இது தீங்கிழைக்கும் ஆப்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஒரு ஆட்டோ பிளாக்கர் ஆகும். கூடவே இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங்கையும், கூடுதல் நீடித்துழைப்பிற்காக கிளாஸ் பைபர் ரெயின்போர்ஸ்டு பாலிமர்-ஐயும் (Glass Fiber Reinforced Polymer) கொண்டுள்ளது.

இது நீண்ட கால ஓஎஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான சாம்சங்கின் சொந்த ஒன்யுஐ 7 (One UI 7) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று சாம்சங் றுதியளித்துள்ளது, அதாவது இது 2031 ஆம் ஆண்டு வரை அப்டேட்களை பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A07 4G Price Drop in Flipkart Selling At Cheapest Price Rs 7900
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X