தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.10000 பட்ஜெட்ல சாம்சங்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) பிரியர்கள் சட்டுபுட்டுனு ஆர்டர் போடும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 50 எம்பி மெயின் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) போன் கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.10000 பட்ஜெட்டுக்குள் ஆர்டருக்கு கிடைக்கும் இந்த சாம்சங் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சாம்சங் நிறுவனத்தின் ஏ சீரிஸ் (A Series) போன்களில் அடிமட்ட பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 வெளியானது. இருப்பினும், 2 ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. வாட்டர்-டிராப் நாட்ஜ் மற்றும் டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) உடன் பீரிமியம் லுக் கொடுக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் (Samsung Galaxy A06 Specifications): சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ (One UI) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. அடிமட்ட பட்ஜெட் விலையில் கிடைப்பதால் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமே கிடைக்கிறது.
இருப்பினும், லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்க 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் (4ஜிபி + 4ஜிபி) + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4ஜிபி + 4ஜிபி) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மெமரியுடன் கூடுதல் சப்போர்ட் கொடுக்க 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கிடைக்கிறது.
இந்த கேலக்ஸி போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெப்ஃரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் யு கட் ஃப்ரன்ட் கேமரா டிசைன் வருகிறது. ரியரில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
8 எம்பி ஃப்ரன்ட் ஷூட்டர் இருக்கிறது. 50 எம்பி கேமரா வருவதால், பட்ஜெட்டைவிட கூடுதல் கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம். ரூ.10000 பட்ஜெட்டில் வழக்கமாக 10W அல்லது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும். ஆனால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்காக டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது. இந்த போர்ட் மட்டுமல்லாமல், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) பேக் செய்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) இருக்கின்றன.
இந்த சாம்சங் போனில் லைட் ப்ளூ (Light Blue), பிளாக் (Black) மற்றும் கோல்டன் (Golden) கலர்கள் இருக்கின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9998ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.10000 பட்ஜெட்டில் பேட்டரி பேக்கப் கொண்ட சாம்சங் போனுக்கு இந்த மாடல் நல்ல ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications