வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.9999 பட்ஜெட்ல PLS டிஸ்பிளே.. 1TB மெமரி.. 25W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
சாம்சங் பிரியர்களில் பட்ஜெட் போன்களை அதிகம் விரும்பும் கஸ்டமர்களை அடித்து புடித்து ஆர்டர் போட வைக்கும்படியான விலைக்கு சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ரூ.10000 பட்ஜெட்டுக்குள் பிஎல்எஸ் டிஸ்பிளே, 1 டிபி மெமரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் (Samsung Galaxy A06 Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஒன் யுஐ (One UI) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. பட்ஜெட் மாடலில் வழக்கமாக வரும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. யு-கட் டிசைன் (U-Cut Design) கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.
அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) பேக் செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் அடோப் ஃபயர்பிளை என்ஜின் (Adobe Firefly AI Engine) சப்போர்ட் வருகிறது. ஆகவே, கேமரா அவுட்புட் மிட்-ரேஞ்ச் குவாலிட்டியில் எதிர்பார்க்கலாம். 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
அதேபோல 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் பெற்று கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.
5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த பேட்டரியுடன் 196 கிராம் எடை மற்றும் 8.0 மிமீ தடிமன் வருகிறது. இந்த சாம்சங்கின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) வருகிறது. மூன்று கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆகவே, லைட் ப்ளூ (Light Blue), பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9999ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. சாம்சங் ஈ-ஸ்டோர்கள் மற்றும் ஆப்லைனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications