இவ்வளவு கம்மியான விலையில் Samsung போனா? 5000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய போன் 50எம்பி கேமரா, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் (Samsung Galaxy A06 specifications):6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
5000mAh பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும். ஆனால் சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வியட்நாமில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த போன் விற்பனைக்கு வரும்.
குறிப்பாக 4ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ06 போனின் விலை 3,190,000 Vietnamese dong (இந்திய மதிப்பில் ரூ.10,675)-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் விலை 3,790,000 Vietnamese dong (இந்திய மதிப்பில் ரூ.12,685)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








