மிரண்டுபோன மார்க்கெட்.. 6ஜிபி ரேம்.. மலிவு விலையில் இந்தியாவுக்கு வரும் சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது இந்த போன் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் மலிவு விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
பிஐஎஸ் (BIS) சான்றிதழ் தளத்தில் SM-A065F/DS என்ற மாடல் நம்பர் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் டூயல்-சிம் உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ06 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் ( Samsung Galaxy A06 Specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் 6ஜிபி ரேம், எச்டி டிஸ்பிளே, மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு, எச்டி டிஸ்பிளே, 6ஜிபி ரேம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களுமே அறிமுகமாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். மேலும் 1600 X 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஒன்யுஐ கோர்(OneUI Core) ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளம் மூலம் இயங்குகிறது இந்த போன்.
அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த கேலக்ஸி ஏ05 போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு கைரேகை ஸ்கேனர் வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிஇ டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் ஆனது கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








