அடுத்த Samsung போன் ரெடி.. மலிவு விலை.. எல்சிடி டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து மலிவு விலையில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் ஆனது வரும் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆன்லைனில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் கூட வெளியாகி உள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் (Samsung Galaxy A06 Specifications): 6.7-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் ( MediaTek Helio G85 SoC) வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த சாம்சங் போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். பின்பு சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவுடன் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ06 போன். குறிப்பாக இந்த போன் 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும். அதேபோல் ரூ.7,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ06 அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
Photo Credit: X/@evleaks


Click it and Unblock the Notifications








