மஜாப்பா.. Samsung-ன் சூப்பர் பட்ஜெட் போன்.. ரூ.9,999-க்கு 6.7-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி!
Samsung Galaxy A06: சூப்பர் பட்ஜெட் விலையில்.. அதாவது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை (Best Smartphone Under Rs.10000) தேடுகிறீர்களா? ஆம் என்றால்.. சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஏ - சீரீஸ் ஸ்மார்ட்போன் உங்களுக்கானதாக இருக்கலாம். நாம் இங்கே பேசுவது - சாம்சங் கேலக்ஸி ஏ06 மாடலை பற்றித்தான். இது எப்போது வேண்டுமானலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இது ஏற்கனவே பிஐஎஸ் சான்றிதழை (BIS certification) பெற்று விட்டது.
இது சில தினங்களுக்கு முன்பாகத்தான் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. என்ன விலைக்கு வரும் என்பது மட்டும்தான் தெரியாத விஷயமாக இருந்தது. தற்போது அதுகுறித்த நம்பகமான தகவலும் கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையானது, சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களோடு, இந்தியாவில் அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
கிடைக்கப்பட்ட தகவலின்படி சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். இவைகள் முறையே ரூ.9,999-க்கும், ரூ.11,499-க்கும் விற்பனை செய்யப்படலாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்த விவரங்கள் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் நிறுவனம் இதே ஸ்மார்ட்போனை ஏற்கனவே வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாடலிலும் அதே ஹார்டுவேர் (அதாவது அதே அம்சங்கள்) இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் செல்ஃபி ஷூட்டருக்கான வாட்டர் டிராப் நாட்ச் உடனான 6.7 இன்ச் எச்டி பிள்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் இது கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த அதே டிஸ்பிளே சைஸ் ஆகும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜஃ சிப்செட் (MediaTek Helio G85 SoC) மூலம் இயக்கப்படுகிறது, இதுவும் கூட கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அதே சிப்செட் ஆகும். கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
அதில் 50எம்பி + 2எம்பி கேமராக்கள் உள்ளன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 8எம்பி கேமராவை கொண்டுள்ளது. இதுவும் கூட கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனின் அதே கேமரா செட்டப் ஆகும். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது. ஓஎஸ் அப்டேட்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கபட்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை போலவே 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளதாய். கடைசியாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








