Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்ளுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,250 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் மேலும் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

4ஜிபி ரேம் + 64ஜிபி கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளியாகி உள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அதுவும் பிளாக், கிரே, கிரீன் போன்ற நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மேலும் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் 5ஜி போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G with 6000mAh battery available at 6 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X