தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. ரூ.10,499 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் கசிந்துள்ளது. இதில் விலை விவரங்கள், ஓஎஸ் அப்கிரேட், நோ-காஸ்ட் ஈஎம்ஐ, ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் போன்ற விவரங்கள் கசிந்து சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. ஏற்கனவே, முழு பீச்சர்கள் கசிந்துவிட்டன. இப்போது, விலை விவரங்களும் கசிந்துவிட்டதால், அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 5ஜி போன் பட்ஜெட்டில் வெளியாகும் என்று மார்கெட்டில் வட்டாரங்கள் தெரிவித்தாலும், 5ஜி வெர்ஷனாக இருப்பதால் எந்த விலையில் எதிர்பார்க்கலாம் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், டெக் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் அவரது எக்ஸ் (X) தளத்தில் லீக் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரை பகிர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த போஸ்டரில் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.10,499ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 8 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை, 1 வருடத்துக்கான ஸ்கிரீன் ரீபிளேஸ்மெண்ட் சலுகை மற்றும் சாம்சங் கேர் போன்ற சலுகைகளையும் இந்த சாம்சங் போன் கொடுக்கும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோக ஓஎஸ் அப்கிரேட் விவரங்கள் உள்ளன.
ஆகவே, இந்த போனுக்கு 4 ஓஎஸ் அப்கிரேட்கள் கிடைக்க இருப்பதை அந்த போஸ்டர் காட்டுகிறது. சொல்லப்போனால், சாம்சங் கேலக்ஸி ஏ06 4ஜி வெர்ஷனின் ஆரம்ப விலை ரூ.9,400 பட்ஜெட்டில் தொடங்குகிறது. ஆனால், இது 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிட்டத்தட்ட அதே பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்க இருக்கிறது. இப்போது கசிந்த பீச்சர்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் மாடல்களுக்கு கிடைக்கும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) பேக் செய்துள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொடுக்கிறது. 4 ஜிபி ரேம் வரலாம்.
வாட்டர் டிராப் நட்ஜ் டிசைன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
4ஜி வேரியண்ட்டில் கிடைத்ததை போலவே 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ கிடைக்கிறது. ஆனால், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது. IP54 ரெசிஸ்டன்ட் உள்ளது. லைட் கிரே (Light Gray), ப்ளூ பிளாக் (Blue Black), மற்றும் லைட் கிரீன் (Light Green) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்து பட்ஜெட் மாடல்களை இந்திய மார்கெட்டில் களமிறக்கி வருகிறது. கடந்த வாரம் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) போனின் விற்பனை நாளை தொடங்குகிறது. இந்த போனும் ரூ.10,000 பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. இப்போது, இந்த போனும் அதே பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்க இருப்பது போஸ்டர் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications








