Home
Mobile

செய்கைனா இதுதான்.. அடிமட்ட பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்களை இனிமேல் கையில் பிடிக்க முடியாது போல என்று சொல்லும்படி அடிமட்ட பட்ஜெட்டில் அடுத்தடுத்து மாடல்கள் வெளியாக இருக்கின்றன. ரூ.10000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) இன்று வெளியாக இருக்கிறது. இப்போது, அடுத்த மாடலுக்கு ரெடியாகும்படி சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) போனின் முழு பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த சாம்சங் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ06 போனின் 4ஜி மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது அடிமட்ட பட்ஜெட்டில் கிடைத்ததால், விற்பனையும் பட்டையை கிளப்பியது. இருப்பினும், 5ஜி வெர்ஷனில் கிடைத்தால், நன்றாக இருக்குமே என்று சாம்சங் பிரியர்கள் விரும்பினர். இது சாம்சங் நிறுவனத்துக்கு கேட்டுவிட்டது போல, அந்த போனின் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

செய்கைனா இதுதான்.. அடிமட்ட பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): இந்த சாம்சங் போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கிடைக்க இருக்கிறது. சாம்சங் க்நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த ஓஎஸ் மட்டுமல்லாமல், 4 ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன் கொடுக்க இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ06 4ஜி போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வந்தது. ஆனால், இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் போன்களில் கிடைக்கும் 50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோ போகஸ்) + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

இதுபோக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. எப்போதும் போல 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேக்கப் சிஸ்டம் வருகிறது. இந்த பேட்டரி இருந்தும் 8.0 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை வருகிறது. கனெக்டிவிட்டி மற்றும் இதர பீச்சர்களை பார்க்கையில், மோனோ ஸ்பீக்கர் (Mono Speaker), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.

மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. சைடுமவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP54 ரெசிஸ்டன்ட் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனில் கிடைக்கிறது. ப்ளூ பிளாக் (Blue Black), லைட் கிரே (Light Gray) மற்றும் லைட் கிரீன் (Light Green) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இவை அதிகாரப்பூர்வமானவை அல்ல.

டெக் டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) எக்ஸ் பக்கத்தில் கசிந்தவை. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனின் வெளியீடு அடுத்த சில வாரங்களில் இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போன் இன்று வெளியாகிறது. ஆகவே, அதன் விற்பனை தொடங்கிய பிறகு இந்த போனின் அறிவிப்பு வரலாம். ரூ.10000 பட்ஜெட்டில் வெளியாகும்.

Image: Samsung Galaxy A06 4G

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G With 50MP Camera 6GB RAM Launch Soon India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X