Home
Mobile

அமேசான் மிரளுது.. மட்ட ரேட்ல Samsung 5G ஸ்மார்ட்போன்.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஆனால், விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) ஸ்மார்ட்போன் நல்ல தேர்வாக இருக்கும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமே கொடுக்கும். ஆனால், மற்ற பீச்சர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது.

29 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,990 விலைக்கு வாங்கலாம். இதுபோக ரூ.448 கேஷ்பேக் கிடைக்கிறது. ரூ.14,200 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. இதுபோக நோ-காஸ்ட் ஈஎம்ஐ, கிரெடிட் கார்டு தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

அமேசான் மிரளுது.. மட்ட ரேட்ல Samsung 5G ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை கொடுத்து இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியுடன் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் கூடுதலாக கிடைத்துள்ளது.

இந்த பேட்டரியுடன் 8 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை கொடுத்து இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைக்கிறது.

மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது. IP54 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. இதில் 12 பேண்ட்களின் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கிடைத்து இருக்கிறது.

இதுபோக ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) கிடைக்கின்றன. யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிளாக் (Black), கிரே (Gray) மற்றும் லைட் கிரீன் (Light Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலைக்கு ஏற்றபடியான பீச்சர்களை இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G With 4GB RAM Gets 29 Percent Discount on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X