Home
Mobile

ரெடியா இருங்க.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ06 4ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது GSMA தரவுத்தளத்தில் கேலக்ஸி ஏ06 5ஜி போன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே விரைவில் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ06 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.10000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெடியா இருங்க.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதன்படி தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

ரெடியா இருங்க.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேற கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

6.7 இன்ச் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G 5G will be launched in India soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X