Home
Mobile

அடிச்சு தூக்கிய Samsung.. 25W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. 5ஜி போனின் விலை குறைப்பு.. எந்த மாடல்?

பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை சில காலம் வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.9,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.1,399 விலையில் உள்ள சாம்சங் 25W அடாப்டரை வெறும் ரூ.299க்கு வாங்க முடியும் என்றும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சு தூக்கிய Samsung.. 25W சார்ஜிங்..  5ஜி போனின் விலை குறைப்பு..

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை பதிவு செய்ய முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் மேலும் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே டிஸ்பிளே வசதி இந்த போனில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடிச்சு தூக்கிய Samsung.. 25W சார்ஜிங்..  5ஜி போனின் விலை குறைப்பு..

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating) உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பிளாக், கிரே, கிரீன் போன்ற நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G price drop in India: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X