சீன நிறுவனங்களை நூடுல்ஸ் போடும் Samsung.. ரூ.10,000 பட்ஜெட்டில் இன்னொரு புதிய 5G போன்.. எந்த மாடல்?
மிகவும் மலிவான விலையில் (ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில்) அடுக்கடுக்காக புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை களமிறக்கி, இந்திய மொபைல் சந்தையை ஆட்சி செய்யும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை "கதம் கதம்" செய்ய வேண்டும் என்கிற ஒரு முடிவை சாம்சங் நிறுவனம் எடுத்து விட்டது போல் தெரிகிறது.
சில தினங்களுக்கு முன், ரூ.9,499 என்கிற ஆபர் விலையில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் நாளை மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள நிலையில்.. சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மாடலின் இந்திய விலையை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ போஸ்டர் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இதை லீக் செய்ததற்கு டிப்ஸ்டர் அபிஷேக் ஷர்மாவிற்கு நன்றி!

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: லீக் ஆன போஸ்டரின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,499 க்கு அறிமுகமாகும். மேலும் லீக் ஆன போஸ்டர் வழியாக, இந்த ஸ்மார்ட்போன் 8 மாதங்கள் வரை நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் வாங்க கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
அதுமட்டுமல்லாமல், சாம்சங் கேர் பிளஸ் (Samsung Care Plus) சேவையில் வரையறுக்கப்பட்ட கால சலுகையும் அணுக கிடைக்கும். இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேர் பிளஸ் சேவையின் வழக்கமான விலையான ரூ.699 க்கு பதிலாக வெறும் ரூ.129 க்கு ஒரு வருடத்திற்கான ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட் கவரேஜை பெறலாம்
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் (4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்) ஆனது தற்போது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக ரூ.9,400 க்கு வாங்க கிடைக்கிறது. 5ஜி வேரியண்ட் ஆனது அதிக திறன் கொண்ட சிப்செட் மற்றும் வேகமான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை பெறுவதால் ரூ.1,000 கூடுதல் செலவாகிறது. 4ஜி வேரியண்ட்டை போலவே, சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் சார்ஜிங் அடாப்டரைச் சேர்க்காது என்பதில் சந்தகேமே வேண்டாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.7-இன்ச் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை பெறலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்
சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஒன்யுஐ 7 உடன் அனுப்பப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். ரியர் கேமரா செட்டப்பில் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப் இருக்கலாம். இது 25W சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி, டூயல் சிம் 5ஜி ஆதரவு மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை, கலர் ஆப்ஷன்கள்: இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.10,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை மேலும் குறைக்க ரூ.500 பேங்க் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போனை பஹாமா ப்ளூ மற்றும் லிட் வயலட் ஆகிய 2 கலர்களில், பிளிப்கார்ட் வழியாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








