Home
Mobile

ஆட்டம் காணும் மொபைல் மார்க்கெட்! மினிமம் ரூ.8990, அதிகபட்சம் ரூ.16990! ஒரே நேரத்துல 4 புது Samsung 5G போன்கள்!

ரூ.10.000 - ரூ.15,000 ஐ சுற்றிய பட்ஜெட்டில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறீர்கள் என்றால்.. சரியான நேரத்தில் தரமான முடிவை தான் எடுத்துள்ளீர்கள். ஏனென்றால் சாம்சங் (Samsung) நிறுவனமானது, ஒரே நேரத்தில் (அல்லது சிறிய இடைவெளியில்) நான்கு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது!

என்னென்ன மாடல்கள்? சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G), சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G), சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி (Samsung Galaxy F16 5G).

ஒரே நேரத்துல 4 புது Samsung 5G போன்கள்!

மேற்கண்ட 4 மாடல்களின் இந்திய ஆதரவு பக்கங்களும் (India Support Pages) தற்போது நேரலையில் உள்ளன. பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (Bureau of Indian Standards) இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட வேகத்தில் சப்போர்ட் பேஜ்களும் லைவ் ஆகியுள்ளன. இதன் மூலம் இந்த 4 ஸ்மார்ட்போன்களும் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஆகிய 4 ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதுவரை வெளியான தகவல்களில் இருந்து இந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

கேலக்ஸி ஏ06 5ஜி மற்றும் கேலக்ஸி எப்06 5ஜி மாடல்கள் 2ஜி, 3ஜி, 4ஜி LTE மற்றும் 5ஜி இணைப்புக்கான ஆதரவையும், ப்ளூடூத் மற்றும் WLAN திறன்களையும் கொண்டிருக்கும். சாம்சங்கின் பட்ஜெட் விலை ஏ0X சீரீஸில், கேலக்ஸி ஏ06 5ஜி ஒரு முக்கியமான மாடலாக இருக்கும். ஏனென்றால் இந்த சீரீஸில் 5ஜி உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 4ஜிபி ரேம் உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 அவுட் ஆஃப் பாக்ஸ் உடனும் வரலாம்

கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி ஏ06 5ஜி மடலின் பிரீமியம் வேரியண்ட் (Premium Variant) ஆக அறிமுகமாகலாம். கேலக்ஸி எப்16 5ஜி மற்றும் கேலக்ஸி எம்16 5ஜி மாடல்களை பொறுத்தவரை, இவைகள் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி (Samsung Galaxy A16 4G) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன்களாக (Rebranded Versions) இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

இது உண்மையாக இருந்தால், இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7-இன்ச் அளவிலான புல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இவைகள் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இந்த சிப்செட் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் ப்ரைமரி உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,990 க்கு அறிமுகம் ஆகலாம். சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,990 க்கு அறிமுகம் ஆகலாம். கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அசல் அறிமுக விலைகள் மேற்குறிப்பிட்ட விலைகளில் இருந்து வேறுபட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A06 5G F06 5G F16 5G M16 5G India Launch Soon Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X