பொளக்குது விற்பனை.. மட்ட ரேட் ரூ.9999 க்கு Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் ஏ சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது, சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி (Samsung Galaxy A07 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதால், முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா கொண்டுள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 பேங்க் தள்ளுபடி போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 ஜெனரேஷன் செக்யூரிட்டி அப்டேட்கள் வருகிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. 8 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி கொண்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுத்துள்ளது. IP54 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் 5.3 கொடுத்துள்ளது. பிளாக் (Black), கிரே (Gray) மற்றும் லைட் கிரீன் (Light Green) கலர்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A07 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
எச்டிபிளஸ் ரெசொலுஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைத்துள்ளது.
IP54 ரேட்டிங் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் உள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








