மார்கெட் காலி.. வெறும் ரூ.11,654 பட்ஜெட்ல சாம்சங்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.11,654 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் அம்சங்கள் (Samsung Galaxy A05s Specifications): இந்த சாம்சங் போன் 6.7 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் (Colour Depth) சப்போர்ட் வருகிறது.

இந்த போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி (MicroSD) கார்டு சப்போர்ட் வருகிறது.
டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இருக்கிறது. இந்த சாம்சங் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன்யுஐ கோர் (OneUI Core) ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Octa-Core Snapdragon 680 SoC) சிப்செட் வருகிறது.
இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்ப்டடுள்ளது. ஆகவே, 50 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஆட்டோ போகஸ் (Auto Focus) கேமராவாகும்.
இந்த கேமராவில் 10x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) சப்போர்ட் இருக்கிறது. அதோடு பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்சங் போனில் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Super Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - டி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 3.5 எம்எம் ஸ்டீரியோ இயர்ஜாக் (Earjack Stereo), ப்ளூடூத் வி5.1 ( v5.1), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. சைடு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் போன் லைட் கிரீன் (Light Green), லைட் வயலெட் (Light Violet) மற்றும் பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் 194 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ.11,654ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு மலிவான விலையில், சாம்சங் போன் கிடைப்பதால், இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் அந்த போனுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த போன் வரும் அக்டோபர் 18ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இங்கும் இந்த போனின் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மிகவும் மலிவான விலையில், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 12 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட சாம்சங் வேண்டுமானால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








