பட்ஜெட் விலை.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. இந்தியாவில் சத்தமின்றி அறிமுகமான சாம்சங் மாடல்..
சாம்சங் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாப 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போன் ரூ.14,990 விலையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் இந்த போனின் மற்றொரு புதிய வேரியண்ட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக 4ஜிபி ரேம் கொண்ட இந்த கேலக்ஸி ஏ05எஸ் மாடலை ரூ.12,999 விலையில் வாங்க முடியும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைட் க்ரீன் (Light Green), லைட் வயலட் (Light Violet) மற்றும் பிளாக் (Black) நிறங்களில் இந்த புதிய வேரியண்ட்-ஐ வாங்க முடியும்.

அதேபோல் சில முன்னணி ஆன்லைனில் தளங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1150 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2400 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 689 சிப்செட் (Qualcomm Snapdragon 680)வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனில் ஒன் யுஐ கோர் 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் இந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இருப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications