கொட்டுது ஆர்டர்.. வெறும் ரூ.13,999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே வியந்து பார்க்கும் விதமாக வெறும் ரூ.13,999 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5,000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் அம்சங்கள் (Samsung Galaxy A05s Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 680 மொபைல் (Octa-Core Snapdragon 680 Mobile) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 610 ஜிபுயு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனுக்கு 2 ஓஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படுகிறது. இந்த சாம்சங் ஏ சீரிஸ் மாடலில் 6.7 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.
அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (MicroSD Card) சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த சாம்சங் போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு டைப் - டி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போனுக்கு சார்ஜர் பாக்ஸ் கொடுக்கப்படாது. இந்த பேட்டரியோடு சேர்த்து, 194 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்ப்டடுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.
13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெயின் கேமராவில் 10x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் வருகிறது. சைடு ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 எஸ் மாடலில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் வி5.1 ( v5.1), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போன் பிளாக் (Black), லைட் கிரீன் (Light Green) மற்றும் லைட் வயலெட் (Light Violet) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை (SBI Bank Credit Card) எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதேபோல ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்படுகிறது.
இந்த போன் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் (Samsung Online Store) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.13,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். கம்மியான பட்ஜெட்டில் டிரிபிள் கேமரா, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 எஸ் மாடலை தேர்வு செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








