அக்.18 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது புது சாம்சங் போன். எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 18-ம் தேதி சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (FHD+ display) வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ( Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதியுடன் வெளிவரும். எனவே இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன்களில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேலக்ஸி ஏ05எஸ் போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு விரைவாக இந்த போனை சார்ஜ் செய்ய முடியும்.

யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), Bluetooth 5.3 உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன். மேலும் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக் (Black), சில்வர் (Silver), லைட் கிரீன் (Light Green), பர்பிள் (purple) நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ5எஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்கிறது சாம்சங்.


Click it and Unblock the Notifications








