Home
Mobile

இதுதான் புதிய Samsung போன்.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா.. கம்மி விலை.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஹீலியோ சிப்செட், 50எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். அதேபோல் இந்த போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

இதுதான் புதிய Samsung போன்.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா..

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 4ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போன் வெளிவரும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 50எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

தற்போது கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் மட்டுமே இணையதளத்தில் கசிந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும். மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி அம்சங்கள்: 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

இதுதான் புதிய Samsung போன்.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா..

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் 5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எப்34 5ஜி போனை ரூ.16,999-விலையிலும், 8ஜிபி ரேம் வேரியண்டை ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

photo courtesy: mysmartprice

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05s renders leaked online: check all details here Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X