யோசிக்காம வாங்குவீங்க.. 50எம்பி கேமரா.. Snapdragon சிப்செட்.. 2 போன்களை களமிறக்கும் சாம்சங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ், கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தெரிவித்த தகவலின்படி, இந்த இரண்டு சாம்சங் போன்களும் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s), கேலக்ஸி ஏ05 (Galaxy A05) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் மற்றும் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன்கள் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (FHD+ display) வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்களின் டிஸ்பிளே.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ( Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதியுடன் வெளிவரும். பின்பு கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek's Helio G85) சிப்செட் உள்ளது. மேலும் இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் 13எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு கேலக்ஸி ஏ05 போன் ஆனது 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ், கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன்கள் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன்களில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு இரண்டு போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த இரண்டு போன்களும் அறிமுகமாகும். எனவே இந்த இரண்டு போன்களும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த போன்கனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), Bluetooth 5.3 உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் போன்கள்.
பிளாக் (Black), சில்வர் (Silver), லைட் கிரீன் (Light Green), பர்பிள் (purple) நிறங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ5எஸ் மற்றும் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். அதேபோல் இந்த இரண்டு போன்களும் ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்கள்.


Click it and Unblock the Notifications








