Home
Mobile

இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் பொக்கிஷம்.. 5000எம்ஏஎச் பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்தியாவில் சியோமி, விவோ, ஒப்போ போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் புதிய புதிய போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது சாம்சங் நிறுவனம். குறிப்பாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) எனும் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இனி வரும் பண்டிகை நாட்களில் இந்த புதிய சாம்சங் போன்கள் மலிவு விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் பொக்கிஷம்.. எந்த மாடல்?

அதேபோல் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 சீரிஸ் போன்களின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது கேலக்ஸி ஏ04 போன் போன்று இல்லாமல் மிகவும் மெலிதான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டுள்ளன கேலக்ஸி ஏ05 சீரிஸ் போன்கள். மேலும் இந்த போன்களின் பின்புறம் எல்இடி பிளாஷ் ஆதரவுகொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன.

வி-வடிவ நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05 சீரிஸ் போன்கள் அறிமுகமாகும். கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் இந்த புதிய சாம்சங் போன்கள் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 Specifications): 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி இதில் உள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜ85 பிராசஸர் (Helio G85 processor) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ05. எனவே இந்த போனில் 5ஜி ஆதரவு இருக்காது. அதாவது 4ஜி ஆதரவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் அறிமுகமாகும். மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் பெரிய டிஸ்பிளே மற்றும் டூயல் கேமராக்களை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 போன். தற்போது TDRA மற்றும் BIS உட்பட பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடல்.

இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் பொக்கிஷம்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் அம்சங்கள்(Samsung Galaxy A05s Specifications): 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் போன் வெளிவரும். அதேபோல் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், டூயல் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ05எஸ் போன்.

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் (Helio G85 processor) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். தற்போது இந்த இரண்டு போன்களின் சில விவரக்குறிப்புகள் மட்டும் தான் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த போன்களின் அனைத்து விவரக்குறிப்புகள் தெரியவரும். அப்போது உடனே அப்டேட் செய்கிறோம்.

source: tecnoblog

photo courtesy: tecnoblog

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05s and Galaxy A05 will be launched in India this festive season at affordable prices : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X