Home
Mobile

அதிருது ஆர்டர்.. வெறும் ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக 50எம்பி கேமரா, 1டிபி மெமரி, எச்டி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) போன் வெறும் ரூ.9999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது.

ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதோடு ஒன்யுஐ கோர் (OneUI Core) ஓஎஸ் சப்போர்ட் மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் போன் மிகவும் கம்மியான பட்ஜெட்டிலும் பக்காவான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.

அந்த வகையில், 50 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

ரூ.9999 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து இந்த போன் 195 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இதுவொரு 4ஜி போன் என்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்விடிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த சாம்சங் போன் லைட் கிரீன் (Light Green), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று (நவம்பர் 28) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங்.காம் (Samsung.com) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதேபோல சாம்சங் ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் மலிவான விலையில் சாம்சங் பிராண்டில் மொபைல் வேண்டும் என்றால், எச்டி டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடலை தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05 With 6GB RAM, Helio G85 Sale Under Rs 10000 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X