Home
Mobile

ஆர்டர் அள்ளுமே.. ரூ.9,890க்கு சாம்சங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 25W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 50எம்பி கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட், 25W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை, விலை மற்றும் அம்சங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 Specifications): இந்த போன் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கொண்டுள்ளது.

ரூ.9,890க்கு சாம்சங்.. 50MP கேமரா..  5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஒன்யுஐ கோர் (OneUI Core) ஓஎஸ் வருகிறது. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட் கொண்டிருக்கிறது. அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் பிளாக் (Black), லைட் கிரீன் (Light Green) மற்றும் சில்வர் (Silver) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு, இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ. 9,890ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. இங்கும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனோடு சாம்சங் கேலக்ஸி ஏ05 எஸ் போனின் அம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ05 எஸ் அம்சங்கள் (Samsung Galaxy A05s Specifications): இந்த போன் 6.7 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் மற்றும் அட்ரினோ 620 ஜிபியு ( Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 6 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 1 டிபி மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ கோர் ஓஎஸ் வருகிறது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த சாம்சங் மாடல் லைட் கிரீன், சில்வர், பிளாக் மற்றும் பிங்க் ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன் மலேசியா மற்றும் தாய்லாந்தில் முதலில் விற்பனைக்கு வருகிறது. அதன்பின் இந்தியாவில் வெளியாகிறது. இதன் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ரூ.15,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05 With 6GB RAM, 50MP Camera, 5000mAh Battery Announced Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X