50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. இந்தியாவுக்கு வரும் புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த கேலக்ஸி ஏ05 போன் சாம்சங் இந்தியா சப்போர்ட் இணையதளத்தில் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்பான். பின்பு இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளன. அதேபோல் குறைந்த எடையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த அசத்தலான கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் மாடல் நம்பர் SM-A055F/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 chipset) சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயன்களுக்கு அருமையாகப் பயன்படும்.எனவே கேமிங் பயனர்கள் இந்த கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
வைஃபை, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.லைட் க்ரீன் (light green), சில்வர்(silver), பிளாக் (black) நிறங்களில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ05 போன். அதேபோல் இந்த போன் ரூ.12,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications