Home
Mobile

வாங்கத் தூண்டும் விலை.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 13.. 25W சார்ஜிங்.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) ஸ்மார்ட்போனின் விலையை தற்போது அறிவித்துள்ளது. அதாவது இந்த போன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் சரியான விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடலை ரூ.9,999 விலையிலும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.12,499 விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லைட் க்ரீன் (Light Green), பிளாக் (Black), சில்வர் (Silver) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

வாங்கத் தூண்டும் விலை.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

மேலும் குரோமா ( Croma) தளத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 பட்டியலிடப்பட்டுள்ளது, அதேசமயம் ஆஃப்லைன் கடைகளிலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். மேலும் 1600 X 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஒன்யுஐ கோர்(OneUI Core) ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளம் மூலம் இயங்குகிறது இந்த போன்.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போனுக்கு கிடைக்கும். 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த கேலக்ஸி ஏ05 போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு கைரேகை ஸ்கேனர் வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் ஆகும். பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A05 price announced in India: check specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X