50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. கம்மி விலை.. இதுதான் புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் மலிவு விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவரும்.
இந்நிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனின் நிறங்கள் மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இப்போது பார்ப்போம். அதாவது இந்த புதிய சாம்சங் போன் ஆனது லைட் க்ரீன் (light green), சில்வர்(silver), பிளாக் (black) நிறங்களில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 specifications) : சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ்
மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த அசத்தலான கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்இ 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் மாடல் நம்பர் SM-A055F என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 chipset) உள்ளது. இந்த சிப்செட் கேமிங் பயன்களுக்கு அருமையாகப் பயன்படும்.எனவே கேமிங் பயனர்கள் இந்த கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.
5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும். குறிப்பாக இந்த புதிய போன் குறைந்த எடையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
photo courtesy: MSPowerUser, 91mobiles


Click it and Unblock the Notifications