பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.10999-க்கு சாம்சங்.. OIS கேமரா.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
சாம்சங் பிரியர்களை அடிச்சு புடிச்சு ஆர்டர் போட வைக்கும் விதமாக ஓஐஎஸ் கேமரா, 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) போனுக்கு விலை குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ05 அம்சங்கள் (Samsung Galaxy A05 Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 16 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்ட பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே மாடலாகும்.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. ஒன்யுஐ கோர் (OneUI Core) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோக 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் 10x டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) சப்போர்ட் உள்ளது.
இதுவொரு ஆட்டோபோகஸ் (Auto Focus) கேமரா மாடலாகும். அதேபோல ஃபுஎல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 120fps ஸ்லோவ் மோஷன் (Slow Motion) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவும் ஓஐஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ05 வேரியண்ட்டில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) சார்ஜிங் கொண்டிருக்கிறது. பேட்டரியோடு 195 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 8.8 எம்எம் தடிமன் வருகிறது.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. இந்த சாம்சங் போனில் லைட் கிரீன் (Light Green), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. அதேபோல டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகின்றன.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும் இருந்தது. இப்போது, 4 ஜிபி மாடலுக்கு ரூ.1,300 விலை குறைப்பும், 6 ஜிபி மாடலுக்கு ரூ.2,000 விலை குறைப்பும் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ரூ.8,699 பட்ஜெட்டில் 4 ஜிபி ரேம் மாடலையும், ரூ.10,999 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் மாடலையும் வாங்கி கொள்ளலாம். இந்த விலைக்குறைப்பானது, சாம்சங் இந்தியா (Samsun India) தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.10000 பட்ஜெட்டில் பக்கா சாம்சங் வேண்டுமானால், இவற்றை ஆப்ஷனில் வையுங்கள்.


Click it and Unblock the Notifications








