புது லுக்கு.. புது கலரு.. கலக்கலாக அறிமுகமான Samsung Galaxy A04s.! விலை இவ்வளவு தானா?

|

Samsung நிறுவனம் இன்று புதிதாக Samsung Galaxy A04s என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Samsung ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் சிப்செட் உடன் 90Hz டிஸ்பிளேவுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரியைப் பெறுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Samsung Galaxy A04s ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச், 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இயங்கும் 6.5' இன்ச் எச்டி+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் உங்களுக்கு octa-core Exynos 850 சிப்செட் உடன் இயங்குகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Samsung Galaxy A04s போனின் கேமரா அம்சம்

Samsung Galaxy A04s போனின் கேமரா அம்சம்

கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை ஆதரிக்க இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. கேமரா பற்றி பேசுகையில், இந்த Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் முன்பக்க ஷூட்டரைக் கொண்டுள்ளது.

சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?சத்தமில்லாமல் JioBook லேப்டாப் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இது யாருக்கு பெஸ்ட்?

பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சத்தின் விபரம்

பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சத்தின் விபரம்

பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சத்தை பற்றி பார்க்கையில், இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த சாதனம் 15W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் பவர் பட்டன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை ஆதரிக்கிறது. இது டூயல் சிம் ஆதரவு, 4G VoLTE, Wi-Fi 802.11ac, புளூடூத் 5.0, GPS, USB-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனின் விலை

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனின் விலை

புதிய Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை வெறும் ரூ.13,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy A04s சாதனம் பிளாக், காப்பர், மற்றும் க்ரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy A04s டிவைஸ் Samsung.com, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகள் வழியாகக் கிடைக்கிறது.

உங்க Internet ஒழுங்கா வேலை செய்கிறதா? இல்லையா? உடனே இப்படி ஸ்பீட் டெஸ்ட் செய்யுங்க.!உங்க Internet ஒழுங்கா வேலை செய்கிறதா? இல்லையா? உடனே இப்படி ஸ்பீட் டெஸ்ட் செய்யுங்க.!

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகை

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சலுகை

Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் மீது அறிமுகச் சலுகையாக, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் பெறக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் முன்னணி NBFC-களில் ரூ. 1000 வரை கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம். இதன் மூலம் Samsung Galaxy A04s இன் விலை ரூ.12,499 ஆகக் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்த புதிய Samsung Galaxy A04s போனை வாங்கலாமா? வேண்டாமா?

இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்ன தெரியுமா?

இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்ன தெரியுமா?

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் 5ஜிக்கு மாற துவங்கியுள்ள நிலையில், இதில் 5ஜி இணக்கம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. சாம்சங்கின் டிஸ்ப்ளே பேனல்கள் நல்ல பெயரைப் பெற்றிருந்தாலும், சாம்சங்கின் Exynos சிப்செட்கள் மீது அவ்வளவு சிறந்த கருத்து பதிவாகவில்லை. எது எப்படியாக இருந்தாலும், சாதனத்தை நாம் பயன்படுத்தினால் மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த விலை புள்ளியில் இது பெஸ்ட் மாடலா இல்லையா என்பதை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A04s Budget Smartphone Launched in India With Triple Rear Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X