ஒரே கல்லுல 2 மாங்காய்: கம்மி விலையில் 2 போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Samsung.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மாரட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே கல்லுல 2 மாங்காய் என்பது போல் ஒரே நேரத்தில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டியுள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது கேலக்ஸி ஏ04 மற்றும் கேலக்ஸி ஏ04இ எனும் இரண்டு ஸ்மார்ட்போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு போன்களின் அம்சங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. ஆனால் கேமராவில் மட்டும் வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேலக்ஸி ஏ04 மற்றும் கேலக்ஸி ஏ04இ போன்கள் வரும் டிசம்பர் 20-ம் தேதி சாம்சங் இணையதளம் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ04இ மற்றும் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்கள் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1560 × 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக இந்த இரண்டு போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த இரண்டு சாம்சங் போன்களும் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. எனவே இந்த சாதங்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OneUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04இ மற்றும் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்கள். அதேபோல் IMG PowerVR GE8320 GPU ஆதரவும் கொண்டுள்ளன இந்த போன்கள்.

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிப/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த இரண்டு போன்களும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளன. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த இரண்டு சாம்சங் போன்களும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளன. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதிக நேரம் இணையத்தைப் பயன்படுத்தலாம். பின்பு கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் எடை 188 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் எனப் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள். மேலும் லைட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,299-ஆக உள்ளது. பின்பு இதன் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.9,999-விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ரூ.11,499-விலையிலும் விற்பனைக்கு வரும். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டை ரூ.12,999-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications