அதே மாதிரிதான் ஆனா இரண்டு முக்கிய வித்தியாசம்: சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் அம்சங்கள் இதுவா?
சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் வடிவமைப்பானது கேலக்ஸி ஏ02 எஸ் மாடலைப் போலவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ 03 விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு கசிந்துள்ளது. இது ஸ்மார்ட்போன் குறித்த முதல் கசிவாகும், கடந்தாண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்02 எஸ் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என ஊகிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ02 எஸ் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்த அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் கேலக்ஸி ஏ02 எஸ் போன்ற ஒட்டுமொத்த வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இருப்பினும் இதில் மாறுபட்ட வடிவமைப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் உடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் வடிவமைப்பு
இதுகுறித்த 91 மொபைல்ஸ், டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர் டோஃபர் உடன் இணைந்து சில ரெண்டர்களை பகிர்ந்துள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் வடிவமைப்பு வாரியாக பார்க்கையில் இது சாம்சங் கேலக்ஸி ஏ02 எஸ் போன்றே தோன்றுகிறது. இருப்பினும் இதில் இரண்டு பெரிய மாற்றங்களுடன் வருகிறது. இதில் இருக்கும் முதல் மாற்றங்கள் குறித்து பார்க்கையில் இதில் பக்கவாட்டில் பொறுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. இதில் இரண்டாவது மாற்றம் குறித்து பார்க்கையில், இதில் மைக்ரோ யூஎஸ்பி போர்ட்டுக்கு பதிலாக யூஎஸ்பி டைப்சி போர்ட் இருக்கிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கேமராக்கள் செங்குத்தாக ஒரு செவ்வக தொகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் இதில் 3.5 மிமீ ஆடியோ போர்ட் இருக்கிறது என்பது கூடுதல் அம்சம் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் இதில் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது. அதோடு இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் என மொத்தம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ02 எஸ் கடந்தாண்டு நவம்பரில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஹூட்டின் கீழ் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மேலும் இதில் 1 டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இதில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications