6.5-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது
கேலக்ஸி ஏ03எஸ் சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த
புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது வரும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் கூட 48எம்பிரியர் கேமரா ஆதரவுடன் வருகிறது. எனவே இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது சாம்சங் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த சாதனம் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை
இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகைசென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் ரூ.13,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
Photo Credit: 91mobiles


Click it and Unblock the Notifications