Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை சாம்சங்.காம் மற்றும் சில ஆன்லைன் தளங்களில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ம் மற்றும் 32ஜிபி மெமரி கொ

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் மாடலின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல்தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் ஹீலியோ பி35

சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எம்டி6765 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளுக்கு தகுந்தபடி அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கேலக்ஸி ஏ03எஸ்

கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்மாடல்.

4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத்

டூயல்-சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்
மாடல். அதேபோல் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வெளிவந்துள்ளது கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A03s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X