48எம்பி ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம அதிகாரப்பூர்வமாக சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி போன்ற விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம்,
சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடல்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இல்லை.மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

இந்த கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் அமசங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு15 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ்.


Click it and Unblock the Notifications