Home
Mobile

ரூ.11,999-விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனத் தகவல்.! முழு விவரம்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது.

 தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ03

வெளிவந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ரூ.11,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுஎன்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேலக்ஸி ஏ03

கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில்UNISOC T606 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பிகேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடல்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இல்லை.மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில்

கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 196 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A03 smartphone pricing details leaked online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X