Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ03 கோர்

கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங்.காம், ரீடெய்ல் ஸ்டோர்கள் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு கோ 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமராஅம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் ஸ்லாட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASSஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்க இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ13 5ஜி

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டுஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல். மேலும் வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A03 Core Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X