Home
Mobile

Samsung Galaxy A03 இந்த மாத இறுதியில் அறிமுகமா? ரூ.12,000 விலையில் இவ்வளவு அம்சங்களா?

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்தியாவில் அதன் தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வதந்தியின் படி, இந்த பிராண்ட் Samsung Galaxy A03 ஸ்மார்ட்போனை கடந்த நவம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், இது பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நன்கு அறிந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அறிந்த டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சாம்சங் Galaxy A03 கோர் இந்தியாவில் டிசம்பர்

சாம்சங் Galaxy A03 கோர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் உற்பத்தியாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அசல் Galaxy A03 உடன் அதிக ஒற்றுமையைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி A03 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்களைப் பற்றி பார்ப்போம். இந்த புதிய Samsung Galaxy A03மலிவு விலை பட்ஜெட் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் பட்ஜெட் விலைக்கு ஏற்ற நியாயமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Samsung Galaxy A03 ஸ்மார்ட்போனுக்கான விவரக்குறிப்புகள்

Samsung Galaxy A03 ஸ்மார்ட்போனுக்கான விவரக்குறிப்புகள்

புதிய Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவருவதனால் 720 × 1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் இன்பினிட்டி -V நாட்ச் TFT LCD பேனலைக் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த பிராண்ட் இந்தியாவில் சாம்சங் Galaxy A03 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் UNISOC T606 ஆக்ட்டா கோர் செயலியில் இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இரண்டு சேமிப்பக மாறுபாடுகளுடன் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy A03 சாதனத்தில்

Samsung Galaxy A03 சாதனத்தில் உள்ள சேமிப்பக விருப்பங்களில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு மாறுபாடு வேரியண்ட் உடன் வருகிறது. புதிய Samsung Galaxy A03 ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இந்த சாம்சங் Galaxy A03 இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 48 எம்பி முதன்மை கேமரா மற்றும் இரண்டாம் நிலை 2 எம்பி டெப்த் சென்சார் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ந்த சாதனத்தின் முன்புறம் 5 எம்பி செல்ஃபி

இந்த சாதனத்தின் முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படலாம் மற்றும் நிலையான சார்ஜிங் விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் Galaxy A03 ஆண்ட்ராய்டு 11 இயங்குதத்தில் செயல்படும் என்று டிப்ஸ்டர் தகவல் கூறுகிறது. இந்த புதிய Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் விலை பற்றி பார்க்கையில், இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வருகிறது.

Samsung Galaxy A03 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Samsung Galaxy A03 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா பகிர்ந்த தகவல்களின் படி, இந்த சாதனம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பிராண்டால் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.12,000 விலையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Samsung Galaxy A03 சாதனம் சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பயனர்கள் இந்த மாடலை கருத்தில் கொள்வது சிறப்பானது.

Best Mobiles in India

English summary
:Samsung Galaxy A03 Budget Smartphone Expected to Arrive in India At Budget Price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X