சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ், கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ02எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் டிஸ்பிளே வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 1.8ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் விலை
சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமர, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.13,200-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 டிஸ்பிளே வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 2.3ஜிகாஹெர்ட் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதிஇடம்பெற்றுள்ளது. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 விலை
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,700-ஆக உள்ளது.பின்பு இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்


Click it and Unblock the Notifications